Quantcast
Channel: Toronto Police Service - News Releases
Viewing all articles
Browse latest Browse all 23668

Arrest in Sexual Assault and Extortion investigation, Mariampillai Sri Chandramohan, 54, also known as "Mohan," Police believe there may be other victims, Tamil interpretation now available, பாலியல் தாக்குதல் மற்றும் பலாத்காரம் தொடர்பான புலன்விசாரணையில், "மோகன்," என்றும் அழைக்கப்படும், மரியாம்பிள்ளை ஸ்ரீ சந்திரமோகன், 54, கைது, வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றார்கள்.

$
0
0
பாலியல் தாக்குதல் மற்றும் பலாத்காரம் தொடர்பான கைது ஒன்றைப் பற்றிப் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்கு ரொறன்ரோ காவல்துறைச் சேவையினர் விரும்புகின்றார்கள்.

கீழ்வருமாறு குற்றஞ்சாட்டப்படுகின்றது:

- டிசம்பர் 19, 20 14, வெள்ளிக்கிழமை, Lawrence Avenue West & Jane Street பகுதியில் ஒரு ஆண் இன்னொரு ஆணைப் பாலியல் தாக்குதல் செய்தார்

கீழ்வருமாறு மேலும் குற்றஞ்சாட்டப்படுகின்றது :

- டிசம்பர் 25, 20 14, வியாழக்கிழமை, Lawrence Avenue West & Jane Street பகுதியில் ஒரு ஆண் இன்னொரு ஆணைப் பாலியல் தாக்குதல் செய்தார்

ஜனவரி 13, 20 15, செவ்வாய்க்கிழமை, "மோகன்," என்றும் அழைக்கப்படும், மார்க்கத்தைச் (Markham) சேர்ந்த மரியாம்பிள்ளை ஸ்ரீ சந்திரமோகன், 54, கைது செய்யப்பட்டு பின்வருவன சார்பாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்:
1) வலுக்கட்டாயமாக அடைத்து வைத்தமை
2) இரண்டு பாலியல் தாக்குதல் குற்றங்கள்
3) இரண்டு பலாத்காரக் குற்றங்கள்
4) அச்சுறுத்தல் கூற்று

ஜனவரி 14, 20 15 , புதன்கிழமை காலை 10 மணிக்கு, 2201 Finch Avenue மேற்கிலுள்ள, நீதிமன்றத்தின் 206ம் இலக்க அறைக்கு வருவதற்கு அவர் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளார்.

வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புகின்றார்கள்.

மரியாம்பிள்ளை ஸ்ரீ சந்திரமோகன், Mornelle Court பகுதியில் conven ience store ஒன்றைச் சொந்தமாக வைத்திருக்கின்றார், முன்பு Danforth Avenue & Coxwell Avenue பகுதியில் Thai restaurant(உணவகம்) ஒன்றை சொந்தமாக வைத்திருந்தார் .

தகவல்கள் தெரிந்தவர்கள், 416-808-1200ல் காவல்துறையினரை, 416-222 -TIPS (8477) ல் அநாமதேயமாக Crime Stoppersஐ, www.222tips .com ல் இணையத்தளத்தை மற்றும் CRIMES (274637)க்கு உங்கள் செய்தியுடன் TOR எனகுறுஞ்செய்தி( text) அனுப்பல் அல்லது Facebookல் ஒரு உதவிக்குறிப்பு இடல் மூலம் தொடர்புகொள்ளும்படி கேட்கப்படுகின்றனர் . iTunes, Google Play அல்லது Blackberry App Worldல் இலவசமாக Crime Stoppers Mobile Appஐத் தரவிறக்கம் செய்யுங்கள்.

மேலும் செய்திகளுக்குப், பார்வையிடுங்கள்: TPSnews.ca .


See original news release in English.

Interpretation services provided by MCIS Language Services.

Viewing all articles
Browse latest Browse all 23668

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>